விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-எப் 10 ராக்கெட் பயணம் தோல்வி...

by Admin / 12-08-2021 11:29:45am
விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-எப் 10 ராக்கெட் பயணம் தோல்வி...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் பயணம் தோல்வியில் முடிவடைந்தது.
 
புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் ராக்கெட் ஏவுதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ள நிலையில், மீண்டும் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டது. அதன்படி இஓஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.

 43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் இலக்கை அடையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் பயணம் தோல்வியில் முடிவடைந்தது.

 

Tags :

Share via