“மெட்ரோ ரயில் நிதியை விடுவிக்க வேண்டும்” - வில்சன் எம்பி

by Staff / 22-07-2024 02:45:56pm
“மெட்ரோ ரயில் நிதியை விடுவிக்க வேண்டும்” - வில்சன் எம்பி

மாநிலங்களவை கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் பேசுகையில், “கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது. ரூ.63,246 கோடியில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட விரிவாக்கத்துக்கு 2020ல் உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்த செலவில் 50 சதவீதத்தை ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசு தற்போது ஒதுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo