செம்மொழி தமிழ் விருது, புதிதாக 6 மீன்பிடி துறைமுகம்... தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

by Admin / 13-08-2021 12:45:08pm
செம்மொழி தமிழ் விருது, புதிதாக 6 மீன்பிடி துறைமுகம்... தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழ் விருது, புதிதாக 6 மீன்பிடி துறைமுகம்... தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

* தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
* காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
* தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு
* உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு


 
காசிமேடு மீன்பிடி துறைமுகம்

* மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி நிதி ஒதுக்கீடு
* மீனவர்கள் நலனுக்கு 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* புதிதாக 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்
* சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
*  2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.
*  ரூ.400 கோடி ஒதுக்கீட்டில் தூய்மை பாரதம் இயக்கம் செயல்படுத்தப்படும்
*  100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

 

Tags :

Share via