மோடி குறித்து வீடியோ குறித்து  வட மாநிலத்தவர் சென்னையில் கைது

by Editor / 15-08-2021 04:41:30pm
மோடி குறித்து வீடியோ குறித்து  வட மாநிலத்தவர் சென்னையில் கைது

 


மோடி பதவி விலக வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட வட மாநிலத்தவரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா என்பவர் 35 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை மாதவரத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டார். பான் மற்றும் ஆதார் அட்டைகளை வாங்கித் தரும் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார்.


சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்த அவர் யூடியூப்பில் அடிக்கடி வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் வீடியோக்களில் இந்தியிலேயே பேசுவதால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவரது வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தன.இந்நிலையில் அவர் மத்திய அரசுக்கு எதிராக பேசியதால் அவர் மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிலர் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, கோடாவாலி காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி சென்னை மாதவரத்துக்கு வந்தனர்.அவரது சமீபத்திய வீடியோக்கள் எதுவும் யூடியூப்பில் காணப்படவில்லை. ஆனால், கொரோனா மற்றும் பொது முடக்க காலங்களில் மக்களுக்கு உதவிகளைச் செய்யாத காரணத்தினால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று 6 மாதங்களுக்கு முன்பு அவர் கோரிக்கை வைத்த வீடியோ உள்ளது.

உத்தரப் பிரதேச காவல் துறையின் குழு ஒன்று சென்னை வந்து, அவரைக் கைது செய்தது. அவரை உத்தரப் பிரதேசம் அழைத்துச் செல்ல மாஜிஸ்திரேட் ஆணை பிறப்பித்ததை அடுத்து அவர் ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.


 

 

Tags :

Share via