முககவசம் இல்லையெனில் அபராதம் இன்று முதல் அமல் நெல்லை மாநகர் காவல்துறை.

by Editor / 16-12-2021 08:38:23am
 முககவசம் இல்லையெனில் அபராதம் இன்று முதல் அமல் நெல்லை மாநகர் காவல்துறை.

நாட்டில் பல பகுதிகளில் மரபு தெரிந்த ஒரு வகை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர் எல்கைக்குட்ப்பட்ட  பகுதிகளில் முகக்கவசம் அணிவது  16ஆம் தேதியான  இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் நோய் பரவும் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக கவசம் அணிந்து சமூகவிலகலை  கடைபிடித்து காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர், மேலும் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால்  அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், முககவசம் அணியாதவர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது பூட்டி சீல் வைக்கும்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

 முககவசம் இல்லையெனில் அபராதம் இன்று முதல் அமல் நெல்லை மாநகர் காவல்துறை.
 

Tags :

Share via

More stories