மாசி அமாவாசை: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

by Staff / 27-02-2025 05:31:38pm
மாசி அமாவாசை: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

மாசி மாத அமாவாசையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அக்னி தீர்த்தக் கடலில் சிவ சிவ கோஷமிட்டப்படி புனித நீராடினர். மேலும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நீராடி இறைவனை தரிசித்தனர். மாசி மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo