வெற்றிகளை தரும் சங்கடகர சதூர்த்தி 

by Editor / 24-08-2021 06:54:37pm
வெற்றிகளை தரும் சங்கடகர சதூர்த்தி 

 

விநாயகருக்கு பூஜை செய்து வழிபட சிறப்பான நாளாக சங்கடகர சதூர்த்தி பார்க்கப்படுகின்றது.
சங்கடம் என்றால் துன்பம், ஹர (கர) என்றால் அறுப்பவன், சதூர்த்தி என்றால் அமாவாசை, பெர்ணமிக்கு பின்னர் வரும் நான்காவது நாள் என்று பொருள்.ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
நமக்கு வரும் சங்கடங்களை சங்கடகரசதூர்த்தி அன்று விநாயகரை பூஜை செய்து வழிபட்டால் போக்க வல்லவர் என்பதால் மாதம்தோறும் வரும் இரண்டு சங்கடஹர சதூர்த்தி மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.ஒரு மாதத்தில் அமாவாசைக்கு பின்னர் வரும் சதூர்த்தி, பெளர்ணமிக்கு பின்னர் ஒரு சதூர்த்தி என இரண்டு சதூர்த்திகள் வந்தாலும்,விநாயகர் சதூர்த்திக்கு முன்னர் வரும் தேய்பிறை சதூர்த்தி மகா சங்கடகர சதூர்த்தியாக கொண்டாடப்படுகின்றது.

இந்த சதூர்த்திக்கும் சந்திரனுக்கும் அதிக நெருக்கம் உண்டு. இந்த நாளில் சந்திரனுக்கு ஏற்பட்ட சங்கடத்தை நீக்கியதாக புராண கதைகள் கூறுகின்றன. சங்கடகர சதூர்த்தி விரதம் இருந்து கணபதியை வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் காலையிலிருந்து விரதம் இருந்து, இரவு சந்திரனை பார்த்துவிட்டு பின்னர் தான் விரதத்தை முடிப்பது வழக்கம்.
பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும்.
விநாயகருக்கு அருகம்புல் அல்லது எருக்கம் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் அவசியம்.
பால், கற்கண்டு, உலர்ந்த திராட்சை இவற்றில் ஏதேனும் ஒரு பழம் கொண்டு சென்று கொடுக்கலாம், முடிந்தால் ஏதேனும் நெய்வேத்தியம் (சுண்டல், கொழுகட்டை) செய்து கொடுக்கலாம்.
11 அல்லது 13 அகல்விளக்கு ஏற்றி விநாயகரை வழிபடுவது மிகவும் விசேசம்.
விளக்கிறக்கு சந்தனம், குங்குமம் வைத்து, எண்ணெய் ஊற்றிய பின்னர் திரி போடவும். (இதுதான் சரியான் விளக்கேற்றும் முறை).
அடுத்த சங்கடகரசதூர்த்தி நாளில் 12, அடுத்து 11, அடுத்து 10 என ஒவ்வொன்றாக குறைத்து வர நம் சங்கடங்கள் குறையும் என்பது வழக்கம்.
விளக்கு ஏற்றும் போது உங்களுக்கு உள்ள சங்கடங்களை இறைவனிடம் கூறி வேண்டிக்கொண்டே ஏற்றலாம்.
இப்படி செய்தால் உங்களின் சங்கடங்களை தீர்த்து விநாயகர் உங்கள் வாழ்வில் ஒளியை ஏற்றி வைப்பார்.
-மகான் 

 

Tags :

Share via