இரட்டை கோபுர தாக்குதல்: 9/11

by Editor / 03-09-2021 03:09:09pm
இரட்டை கோபுர தாக்குதல்: 9/11

001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர்.

இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் தீவிரவாத குழுவினர் ஹைஜாக் செய்தனர்.

அதன்பிறகு நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் உள்ள கட்டடங்களை தாக்குவதற்கான ஒரு ஏவுகணை போல அந்த விமானங்கள் செயல்பட்டன.

இரு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தை தாக்கின. முதல் விமானம் `நார்த் ட்வர்` என்று சொல்லப்படும் கட்டடத்தை உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தாக்கியது. இரண்டாவது விமானம் சவுத் டவரை 9.03 மணிக்கு தாக்கியது.நார்த் டவரில் பாதிப்புக்கு எளிதாக உட்பட்ட பகுதியில் யாரும் தப்பிக்கவில்லை ஆனால் சவுத் டவரின் அந்த பகுதியில் இருந்து 18 பேர் தப்பினர்.பல்வேறு நாடுகளை சேர்ந்த 77 பேர் உயிரிழந்தனர். பேரழிவு மீட்பு பணியில் உள்ள 441 பேரை இழந்தது நியூயார்க் நகரம்.

ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். பலருக்கு தாக்குதல் தொடர்பான உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. விஷத்தன்மை கொண்ட இடிபாடுகளில் பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன.

இஸ்லாமியவாத கடும்போக்கு இயக்கமான அல் கய்தா, ஆப்கானிஸ்தானிலிருந்து ஒசாமா பின் லேடனின் தலைமையில் இந்த தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் முஸ்லிம் நாடுகளில் சண்டையை உருவாக்குவதாக அந்த இயக்கம் குற்றம் சாட்டியது.விமானத்தை கடத்திய செயலில் 19 பேர் ஈடுபட்டனர். மூன்று குழுக்களாக ஐந்து பேர் இருந்தனர். பென்னிசில்வேனியாவில் மட்டும் நான்கு பேர் இருந்தனர்.ஒவ்வொரு குழுவிலும் விமான இயக்க தெரிந்த ஒருவர் இருந்தனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள விமானிகள் பயிற்சி பள்ளியில்தான் பயிற்சி பெற்றனர்.கட்டடம் தீப்பற்றி எரிந்தது. கட்டடத்தின் மேல் மாடிகளில் பலர் சிக்கி தவித்தனர். புகை நகரம் முழுவதும் சூழ்ந்தது. இரண்டே மணி நேரத்தில் 110 மாடி கட்டடமும் சரிந்து விழுந்து புகை மண்டலத்தை உருவாக்கியது.9.37 மணியளவில் மூன்றாவது விமானம் பென்டகனின் மேற்கு பகுதியை தாக்கியது. பென்டகன் என்பது அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட தலைமையகம். இது நாட்டின் தலைநகரமான வாஷிங்டன் டி.சியில் உள்ளது.

நான்காவது விமானம் பென்னில்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் நொறுங்கி விழுந்தது. ஆனால் இந்த விமான நாடாளுமன்ற கட்டடமான கேபிட்டலின் மீது மோத திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பயணிகள் சண்டையிட்டதால் அது வயல்வெளியில் மோதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  • மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள். இதில் விமானத்தை கடத்தியவர்கள் 19 பேர் சேர்க்கப்படவில்லை.
  • விமானங்களில் இருந்த 246 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.
  • இரட்டை கோபுரத்தில் 2606 பேர் உயிரிழந்தனர்.
  • பென்டகனில் மொத்தம் 125 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளம் வயது நபர் இரண்டு வயது குழந்தை கிறிஸ்சின் லீ ஹான்சன் ஆகும். இந்த குழந்தை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்கள் ஒன்றில் தனது பெற்றோர் பீட்டர் மற்றும் சூவுடன் பயணம் செய்தது.

இதில் பலியான வயதானவர், 82 வயது ராபட் நார்டன். இவரின் தனது மனைவி ஜாக்குலினுடன் திருமணம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தார்.

முதல் விமானம் கட்டடத்தில் மோதியபோது சுமார் 17 ஆயிரத்து 400 பேர் கட்டடத்தில் சிக்கியிருந்தனர்.

 

Tags :

Share via