தலீபான்களுக்கு உதவிய பிரபல நாடு

by Editor / 06-09-2021 09:54:56am
தலீபான்களுக்கு உதவிய பிரபல நாடு

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் தலீபான்கள் கைப்பற்றாத ஒரே மாகாணம் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு ஆகும். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அப்துல்லா சலே அங்கிருந்து தப்பி சென்று பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்து அவர் கூறியதாவது "தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் கைப்பற்றியது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமில்லை. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த அனைவருக்கும் ஏற்பட்ட அவமானம். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கு அவர்களுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தலீபான்கள் காபூலை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய ஒவ்வொரு மணிநேரமும் பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து அவர்களுக்கு கட்டளைகள் இடப்பட்டுள்ளது. அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிய விவகாரத்தில் அவர்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் இருந்ததுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் காபூல் நகரத்தில் இருக்கிறார்கள். இந்த விஷயம் உங்கள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும்" எனக் கூறியுள்ளார். இதனையடுத்து பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் தஞ்சமடடைந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அப்துல்லா சலே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ கடித பேட்டி அளித்துள்ளார். அந்த எழுத்துப்பூர்வ கடித பேட்டியில் அவர் கூறியதாவது "ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரை தலீபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுற்றி வளைத்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இந்த செய்தி சற்று தாமதமாக தான் எனக்கு தெரியவந்தது. இந்த செய்தியை அறிந்த நான் ஆப்கானிஸ்தானின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அதிபர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் காபூல் நகரத்தில் உள்ள காவல் ஆணையரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் நாங்கள் ஒரு மணிநேரம் மட்டுமே தாக்கு பிடிப்போம் என கூறினார். இதனைத்தொடர்ந்து காபூலை தலீபான்கள் சுற்றிவளைத்த அந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் படையை சேர்ந்த ஒருவரை கூட நான் அங்கு பார்க்கவில்லை. அதன்பின் நான் அகமது மசூதை தொலைபேசியில் தொடர்புகொண்டு பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்வது குறித்து ஆலோசித்தேன். மேலும் வீட்டிலிருந்த எனது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து எனது மெய்பாதுகாவலரான ரஹீமை தொடர்பு கொண்டு பேசினேன்.

நாம் இங்கிருந்து பஞ்ஷிர் பகுதிக்கு செல்லப் போகிறோம். இந்நிலையில் பஞ்ஷிர் பகுதிக்கு செல்லும் வழியில் தலிபான்களிடம் நான் சிக்கும் நிலை ஏற்பட்டால் என் நெற்றியில் இரு முறை துப்பாக்கியால் சுட்டு விட வேண்டும் என்று எனது மெய்பாதுகாவலர் ரஹீமிற்கு ஆணையிட்டேன். மேலும் குரான் மீது ஆணையிட்டு உறுதி கூற வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டேன். அதனால் ரஹீம் இந்த ஒப்புதலுக்கு சம்மதம் தெரிவித்தார். 

 

Tags :

Share via