8 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை ஆப்கானில் சுட்டுக் கொன்ற தலீபான்கள்

by Editor / 06-09-2021 05:56:31pm
8 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை ஆப்கானில் சுட்டுக் கொன்ற தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் 8 மாத கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தலீபான்கள் தான் கொலை செய்தனர் என நேரில்கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் ‘‘நாங்கள் கொல்லவில்லை’’ என தலிபான்கள் மறுத்துள்ளனர்.

பானு நீகர் என்ற பெண் போலீஸ் அதிகாரி தனது கணவர் மற்றும் குழந்தைகளின் கண் எதிரில் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் மத்திய கோர மாகாணத்தின் தலைநகரான பெரோஸ்பூரில் அவர் படுகொலை செய்யப்பட்டார். எனினும் தலீபான்கள் அவரது மரணத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று தலீபான்கள் கூறினர்.

போலீஸ் அதிகாரியின் மரணம் குறித்து விசாரணையைத் தொடங்குவதாக அமைப்பு வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நிர்வாக அமைப்பில் பணியாற்றியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் அதிகாரியின் மரணம் தனிப்பட்ட விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்றும் தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

மரணத்திற்கு காரணமான தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயுதங்களடன் அவரது வீட்டிற்கு வந்ததாகவும், வீடு முழுவதும் அவரை தேடிய குடும்பத்தினர் அவர்களை கட்டிப்போட்டதாகவும் வந்தவர்கள் அரபு மொழி பேசியதாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 15 ந் தேதி அன்று ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த போது, மனித உரிமைகள் குழுக்கள் நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தன. அப்போது தலிபான்கள் அரசாங்கத்திற்காக பணியாற்றிய எவருக்கும் எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதி கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தலீபான்கள் என்றாலே பெண்கள் நிலைகுலைந்து பயந்து நடுங்குவதாக பாதுகாப்புத்துறை அய்வாளர் சஜ்ஜன் கோஹல் என்பவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via