லாரி வாடகை 25% அதிகரிப்பு: பொதுமக்கள் ஒத்துழைக்க சம்மேளனம் வேண்டுகோள்

by Editor / 17-06-2026 12:01:19pm
லாரி வாடகை 25% அதிகரிப்பு: பொதுமக்கள் ஒத்துழைக்க சம்மேளனம் வேண்டுகோள்

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வேறு வழியின்றி ஜூன் 15 முதல் லாரி வாடகையை 25% உயர்த்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏற்படும் சிரமங்களுக்கு பொதுமக்கள் தங்களை மன்னிக்க வேண்டும் என சம்மேளனத்தின் மாநில தலைவர் தனராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தொழில் நஷ்டத்தை தவிர்க்கவே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo