அன்பு தம்பி சாண்டிக்கு.. அன்புடன் கமல்

by Editor / 07-09-2021 03:03:36pm
அன்பு தம்பி சாண்டிக்கு.. அன்புடன் கமல்

கமல் ஹாசனிடம் சாண்டி ஆட்டோகிராப் ஒன்றை வாங்கி அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதனை தொடர்ந்து கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது சில திரைப்படங்களிலு, ஆல்பம் பாடலுக்கும் நடனம் அமைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிக் பாஸ் சீசன் 5-க்கான ப்ரோமோ வீடியோவை இவர் தான் இயக்கியிருந்தார்.

அந்த ப்ரோமோ வீடியோவை மிகவும் அழகாக கொடுத்திருந்தார். ரசிகர்களுக்கு மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு போது சாண்டி மாஸ்டர் கமல் ஹாசனிடம் ஆட்டோகிராப் ஒன்றை வாங்கி அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் " அன்பு தம்பி சாண்டிக்கு...அன்புடன் கமல்ஹாசன் 2021 அன்றும் இன்றும் என்றும் உலகநாயகன்..அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த ஒரு பையனுக்கு பேச முடியாத தருணம்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via