கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி :

by Editor / 07-09-2021 03:18:37pm
கூட்டுறவு வங்கிகளில்  நகைக்கடன் தள்ளுபடி :

முன்பு ஜனவரி மாதம் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்' என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் சில மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன.

இதை சட்டசபையில் சுட்டிக்காட்டி பேசிய இப்போதைய நிதியமைச்சர் பழனிவேல், பயிர் கடன் ரத்து முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமை என்றார். உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து முடிவு எடுத்தால், தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர் என்றார்.

அதே போல் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூட்டுறவு வங்கி நகை கடனில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 5 வங்கிகளில் போலியான முறையில் நகை கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே தான், நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு பொறுமை காத்து வருவதாக தெரிகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக கூட்டுறவுத்துறை அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் விபரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் பயனாளிகளின் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via