பெண் மருத்துவர் மர்ம மரணம்.

by Staff / 23-10-2023 01:45:30pm
 பெண் மருத்துவர் மர்ம மரணம்.

மதுரை கருப்பாயூரணி மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த ஆசைகாளியின் மகள் ஜீவன்யா (28) என்பவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார் இவருக்கு, கனகவேல் காலனி மனோஜ்குமாருடன், 2020 ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மனோஜ்குமாரின் தந்தை, மருமகள் ஜீவன்யா உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடப்பதாக அவரது தந்தை ஆசைகாளிக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த ஆசைகாளியும், அவரது மனைவியும் மகள் ஜீவன்யாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் ஆர். டி. ஓ. விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via