இந்தி மொழியை கற்காமலேயே தமிழர்கள் நோபல் பரிசு பெறுவது முதல் இஸ்ரோ விஞ்ஞானிகளாக உயர்வது வரை.. உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், இந்தி மொழியை கற்காமலேயே தமிழர்கள் நோபல் பரிசு பெறுவது முதல் இஸ்ரோ விஞ்ஞானிகளாக உயர்வது வரை பல சாதனைகளை படைத்துள்ளனர் என்றும் உயர் கல்வி மற்றும் உழைக்கும் பெண்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு இந்த இரு மொழி கொள்கையை அடித்தளம் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சிக்கான என்ஜினாக செயல்படுகிறது என்றும் தமிழ்நாடு எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்றும் ஆனால் இந்தி திணிக்கப்படுவதை மட்டும் எதிர்க்கிறது என்றும் இந்தி படிக்காததால் நாட்டுப்பற்று இல்லை என்றும் பொருள் அல்ல என்றும் தெரிவித்துள்ளவர் மும்மொழி கொள்கையை மறைமுகமாக திணிக்கும் நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று கல்வி உரிமைச் சட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் ஏற்கனவே ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக சிறந்த மாதிரி பள்ளிகளும் குடியிருப்பு பள்ளிகளும் தரமான கல்வியை வழங்கி வருவதாகவும் நவோதயா பள்ளிகளுக்கு என தனியாக நிலம் ஒதுக்கீடு செய்ய தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
Tags :



















