அரியானா மாநிலம் கர்னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணி

by Editor / 08-09-2021 10:06:47am
அரியானா மாநிலம் கர்னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணி

கடந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி எட்டாம் தேதி விவசாயிகள் போராட்டத்தின் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்கள் கோரி வருகின்றன.

மாவட்ட நிர்வாகம் தங்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று விவசாயிகள் முதலில் கூறினார்கள். திங்கட்கிழமை கர்னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் பதில் தருவதாக கூடினார்கள். திங்களன்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் கிடைக்கவில்லை. அதனால்

செவ்வாய்க்கிழமை காலை விவசாயிகள் பெரும் திரளாக நியூ அனாஜ் மண்டி என்ற இடத்தில் கூடினார்கள்.

 விவசாயிகளின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது அதைத்தொடர்ந்து 11 பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்கள் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

அதன்பிறகு விவசாயிகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் கூறியுள்ள இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை முறிந்து விட்டது.

நம் கோரிக்கையை வலியுறுத்த ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நாம் அமைதியாக செல்லுவோம் . செல்லும் வழியில் எந்த இடத்தில் போலீஸ் நம்மைத் தடுக்கிறதோ அந்த இடத்தில் நாம் அப்படியே உட்கார்ந்து விட வேண்டும். போலீசாருடன் எந்த கைகலப்பும் செய்யக்கூடாது என்று விவசாயிகளின் தலைவர்கள் தெளிவாக வலியுறுத்தினார்கள்.

போலீஸ் அதிகாரிகளுடன் பேசும்பொழுது மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் மண்டையை உடைக்கும் படி உத்தர விட்ட விவரங்கள் அடங்கிய டேப் இப்பொழுது சமூக இணையத்தளங்களில் ஒலிபரப்பப்படுகிறது.

போலீஸ் நடத்திய தடியடியில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.

போலீஸ் தடியடியினால் அந்த விவசாயி உயிரிழக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

தடியடி நடத்தும் படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவரை உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் டிகைத் கோரினார்.

விவசாயிகளின் போராட்டத்தை எதிர்நோக்கி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பேரணி காரணமாக டெல்லி- கர்னால் -அம்பாலா பெருவழி மூடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via