சபரிமலையில் தங்க கிரீடம் திருடப்பட்டு போலி கிரீடம் வைத்துள்ளதாக வந்த செய்தியை மறுத்துள்ளது தேவஸ்தானம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கிரிடம் திருடப்பட்டு போலிக்கிட வைக்கப்பட்டதாக செய்திகள் பரவின. 2012 ஆம் ஆண்டு 446 கிராம் எடை கொண்ட தங்க கிரீடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கியிருந்தனர். இந்த கிரீடம் திருடப்பட்டு அதற்கு பதிலாக 240 கிராம் எடையுள்ள போலிகளிடம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து திரு ஆபரண ஆணையர் அசல் தங்க கிரீடம் மற்றும் பக்தர்கள் வழங்கிய இதர கிரீடங்கள் அனைத்தும் சன்னிதான பாதுகாப்பு அறையில் பத்திரமாக இருப்பதாகவும் இது குறித்து கேரளா அரசும் தேவஸ்தான வாரியமும் நடத்திய ஆய்வுக்குப் பின் தங்க கிரீடம் காணாமல் போகவில்லை .அது பத்திரமாக உள்ளது என்றும் மறுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tags :



















