அரசு பள்ளியில் மோதல் மாணவன் கவலைக்கிடம்
ஈரோடு பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் கழிவறையில் தாக்கியதில் சுயநினைவை இழந்து அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தீவிர சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் தேவைப்படுவதால் நிதி உதவி செய்ய முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் விசாரணை நடத்தினார்.
Tags :



















