இன்று நவராத்திரி முதல் நாள்
இன்று நவராத்திரி முதல் நாள்.. தீமையை வென்றெடுத்த நன்மைக்குரிய ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பிற்குரிய நாள்.
தேவர்களுக்கும் மக்களுக்கும் பெரும் துன்பம் தந்த அசுரன் மகிஷாசுரனை அழிக்க தேவர்கள் தங்கள் சக்தியை ஒருங்கிணைத்து துர்கா தேவியை உருவாக்கி தேவியும் அசுரனும் ஒன்பது நாட்கள் போர் செய்து பத்தாம் நாள் அன்று துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்து வெற்றியை கொண்டாடும் நாள் தான் விஜயதசமி. துர்க்கை போர் புரிந்து மகிஷாசுரனை வதம் செய்த ஒன்பது நாட்களை குறிப்பிடுவது தான் நவராத்திரி. இந்த நவராத்திரி வசந்த நவராத்திரி என்றும் ஆசான நவராத்திரி என்றும் சாரதா நவராத்திரி என்றும் மாக நவராத்திரி என நான்கு நவராத்திரிகளாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சாரதா நவராத்திரி மிக முக்கியமான ஒரு நவராத்திரியாக கொண்டாடப்படுகின்றது. மூன்று முதலாவதுதைரியத்தை கொடுக்கும் துர்க்கை வழிபாடு இரண்டாவது செல்வம் வளம் பெற கொண்டாடப்படும் லட்சுமி வழிபாடு மூன்றாவது ஞானத்தை வழங்கும் சரஸ்வதி வழிபாடு. இந்த மூன்று தெய்வங்களையும் மூன்று சக்திகளையும் வழிபடுவதின் மூலமாக அனைத்து நன்மைகளும் பெற முடியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக நவராத்திரி முதல் நாளிலிருந்து வீடுகளில் பொம்மைகளை கொலுவில் வைத்து பூஜைகள் செய்து கொண்டாடுவர்.
Tags :


















