இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி
நியூசிலாந்தில்கிறைஸ்ட்சேர்ச் மைதானத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது .அடுத்து ஆட வந்த இந்திய அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களத்தில் இறங்கி 19.5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இரண்டாவது முறையாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
Tags :


















