திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளது அதிமுக

by Admin / 19-05-2023 01:12:38pm
திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளது அதிமுக

திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளது அதிமுக இது குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22/5/2023 திங்கட்கிழமை காலை 10:25 மணிக்கு கழக பொதுச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் வேளச்சேரி சாலை சைதாப்பேட்டை சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அனைவரும் குழுமி அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலகம் சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து முக்கிய கழக நிர்வாகிகள் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து நடவடிக்கை உள்ளார்கள் இந்த பேரணியில் தலைமை கழகம் செயலாளர்கள் மாவட்ட கழக செயலாளர்கள் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளது அதிமுக
 

Tags :

Share via