தீபாவளியை முன்னிட்டு பீகாருக்கு சிறப்பு ரயில்

by Staff / 16-10-2022 05:11:08pm
தீபாவளியை முன்னிட்டு பீகாருக்கு சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து பீகார், தானாப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.திருநெல்வேலி - -தானாப்பூர் சிறப்பு ரயில், அக். , 18 மற்றும் அக். , 25 நள்ளிரவு 3: 00 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக அக். , 20 மற்றும் அக். , 27 மதியம் 2: 30 மணிக்கு தானப்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தானாப்பூர் - -திருநெல்வேலி சிறப்பு ரயில் அக். , 21 மாலை 6: 50 மணிக்கு புறப்பட்டு அக். , 24 அதிகாலை 4: 20 மணிக்கு திருநெல்வேலி வரும்.

தானாப்பூர் செல்லும் ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, பொள்ளாச்சி, போத்தனுார், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர்.

கூடூர், நெல்லுார், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கல்கலுார், பீமாவரம் நகர், துவாடா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனியகுடா, கேசிங்கா பக்தியார்பூர் பாட்னாவில் உட்பட பல நகரங்களில் நின்று செல்லும்.

தானாப்பூரில் இருந்து- திருநெல்வேலி வரும் ரயில் கோவை, போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்படாது. சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து பீகார், தானாப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருநெல்வேலி - -தானாப்பூர் சிறப்பு ரயில், அக். , 18 மற்றும் அக். , 25 நள்ளிரவு 3: 00.

 

Tags :

Share via