வெற்றியை நோக்கி கோடியில் ஒருவன்

by Editor / 22-09-2021 05:35:50pm
வெற்றியை நோக்கி  கோடியில் ஒருவன்

செப்டம்பர் 17 அன்று அர்ஜூன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ’பிரண்ட்ஷிப்’ விஜய்ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்கள் வெளியானது. இதில் கோடியில் ஒருவன் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் 367 திரைகளில் வெளியான இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில்ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு அரசியல் படம். சமீப கால அரசியல் படங்களில் ஏழைகளின் குடியிருப்புதான் கதையின் மையக் கருவாக உள்ளது. அதுபோலவே இந்தப் படத்திலும் அதுவே மையக் கரு. பொதுவாக காவல்துறை, நீதித்துறை, அரசியல்வாதிகள் பற்றிய படங்களுக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கும். இதுவரை வந்த படங்களில் அரசியல்வாதிகள் ஊழல், நிர்வாக சீர்கேடு, செயல்படா தன்மை பற்றி பேசப்பட்டிருக்கிறது.

ஆனால் கோடியில் ஒருவன் படம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை பற்றி மட்டும் விரிவாக பேசியிருக்கிறது. விஜய் நடித்த தமிழன் படத்தில் குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலப்பது பற்றி ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியின் முழுமையான விரிவாக்கம்தான் கோடியில் ஒருவன். கூடுதலாக படத்தின் கதாநாயகன் முதல்வன் அர்ஜூன் போன்று அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் காரணமாக அரசியல்வாதியாக மாற்றம் கண்டு மாநிலத்தின் முதல்வர் ஆகும் சூழல், அவரை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படுகிறது.மக்களால் இந்தப் படம் ரசிக்கப்படுவதற்கும், அதன் காரணமாக குடும்பங்கள் திரையரங்கை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். 

 

Tags :

Share via