அரசியல்வாதி; எழுத்தாளர்; ஏ. வி. பி. ஆசைத்தம்பி

by Editor / 23-09-2021 04:51:22pm
அரசியல்வாதி; எழுத்தாளர்; ஏ. வி. பி. ஆசைத்தம்பி


ஆசைத்தம்பி வன்னியப்பெருமாள் பழனியப்பன் ஆசைத்தம்பி என்னும் ஏ. வி. பி. ஆசைத்தம்பி (செப்டம்பர் 24, 1929 - ஏப்ரல் 7, 1979) தமிழக அரசியல்வாதி; எழுத்தாளர்; இதழாளர்; தமிழக சட்டமன்ற உறுப்பினர்; இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர்.ஆசைத்தம்பி 1924 – செப்டம்பர் 24ஆம் நாள் விருதநகரில் பழனியப்பன், நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1930ஆம் ஆண்டில் விருதுநகரில் உள்ள சத்திரிய வித்தியாசாலையில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார்; 


அங்கேயே ஆறாம் வகுப்பு வரை பயின்றார். 1937ஆம் ஆண்டில் பாளையம்கோட்டையில் உள்ள தூய சான்சு நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து ஏழு, எட்டாம் வகுப்புகளை, அப்பள்ளியின் விடுதியில் தங்கி, பயின்றார். 1940ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பை விருதுநகர் நாடார் நகர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1941ஆம் ஆண்டில் விருதுநகர் சத்திரிய வித்தியாசாலையில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பைப் பயின்று, தோல்வி அடைந்தார்.ஆசைத்தம்பிக்கு தந்தையாரான பழனியப்பன் நீதிக்கட்சியில் ஈடுபாடுடையவர். எனவே ஆசைத்தம்பியும் மாணவப் பருவத்திலேயே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் கருத்துகளால் கவரப்பட்டார்.
அக்கருத்துகளை பரப்புவதற்காக விருதுநகரில் இளைஞர் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். அக்கழகத்தில் பாரிசுடர் கே. டி. கே. தங்கமணி (பின்னாளில் பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகப் புகழ்பெற்றவர்) உள்ளிட்ட பலரை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தார்; தானும் சொற்பொழிவாற்றிப் பழகினார். 1942 ஆகத்து 9 ஆம் நாள் முதன்முறையாக பெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார்.1942ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற திராவிட தொண்டர் படை மாநாட்டில் பங்கேற்றார். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று சில மாதங்கள் வணிகத்தில் ஈடுபட்டார். மீண்டும் விருதுநகருக்குத் திரும்பி தனது அரசியற் பணியைத் தொடர்ந்தார்.

1944 – சூன் 4ஆம் நாள் விருதுநகரில் திராவிட மாணவர்கள் மாநாடு நடைபெற்றது. ஆசைத்தம்பி அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.1950ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23, 24ஆம் நாள்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாட்டை ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுத்துரிமை, பேச்சுரிமை மாநாட்டிற்கு ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.1961ஆம் ஆண்டில் ஈ. வெ. கி. சம்பத்து தலைமையில் ஓரணியினர் தி. மு. க.விலிருந்து விலகிச் சென்று தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினர். அப்பொழுது ஆசைத்தம்பி சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

 

Tags :

Share via