நெல்லையில் காவல்துறை அதிகாரிகளுக்கு  சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பயிற்சி வகுப்பு

by Editor / 25-09-2021 05:25:56pm
நெல்லையில் காவல்துறை அதிகாரிகளுக்கு  சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பயிற்சி வகுப்பு

 

திருநெல்வேலி சரக காவல்துறை அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு, உத்தரவின் பேரில் திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்கண்காணிப்பில் திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் நடைபெற்றது.

மும்பையை சேர்ந்த கேதான் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனர் கேதான் மற்றும் இணை நிறுவனர் மனோஜ் துபே பயிற்சி வகுப்பினை நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் Call Details Record (CDR) விவரங்களை ஆராய்தல், குற்றங்களை ஆராய்ந்து தொலைதொடர்பு விபரங்களுடன் பொருத்துதல், வங்கி பரிவர்த்தனை மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி மோசடி குற்றங்களை ஆராய்தல், ஆண்டிராய்டு மொபைல் போன்கள் மூலம் துரிதமாக சைபர் குற்றங்களை பற்றிய விவரங்களை சேகரித்தல் மற்றும் சைபர் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,1 உதவி காவல் கண்காணிப்பாளர்,1 துணை காவல் கண்காணிப்பாளர், 10 பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கள், 5 காவல் ஆய்வாளர்கள், 14 உதவி ஆய்வாளர்கள், மற்றும் 22 காவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via