காங்கிரஸ் கமிட்டியில் இருந்து கேரள முன்னாள் தலைவர் சுதிரன் ராஜினாமா

by Editor / 27-09-2021 05:26:43pm
காங்கிரஸ் கமிட்டியில் இருந்து கேரள முன்னாள் தலைவர் சுதிரன் ராஜினாமா



அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம். சுதிரன் ராஜினாமா செய்தார்.அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கேரள மாநிலத்துக்கு ஆன பொறுப்பு வகிக்கும் தாரிக் அன்வர் திருவனந்தபுரத்துக்கு வந்து இருக்கும் பொழுது தனது ராஜினாமா கடிதத்தை சுதிரன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.சென்ற வாரம் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து சுதிரன் ராஜினமா செய்தார்.


தனது ராஜினாமா கடிதத்திற்கான  காரணத்தை இன்னும் வெளியிடவில்லை.பல ஆண்டுகள் சேவை செய்த காங்கிரஸ் கட்சியிலிருந்து சுதிரன் முழுக்க ராஜினாமா செய்யும் பணியே துவக்கி இருக்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் கூறின. அரசியல் விவகாரக் குழுவில் இருந்து சுதிரன் ராஜினாமா செய்த பொழுது அவரை சமாதானப்படுத்த கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சதீஷ் முயற்சி செய்தார். அவர் முயற்சி பலன் தரவில்லை.கட்சியில் உள்ள மூத்த தலைவர்களின் ஆலோசனைகளுக்கு தற்பொழுது அகில இந்திய காங்கிரஸ் தலைமை மதிப்பதில்லை. கொள்கை தொடர்பான விஷயங்களிலும் மாநில காங்கிரசில் இருந்து தருவிக்கப்படும் ஆலோசனைகள் ஏற்கப்படுவதில்லை சுதீரன் உள்பட உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா, முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோரது புகார்கள் ஆகும்.


கேரள காங்கிரஸ் முழுக்க தற்பொழுது காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.கட்சிக்குள் ஆழமான விரிசல்கள் உள்ளன என்பதை சுதிரன் ராஜினாமா காட்டுகிறது.

 

Tags :

Share via