"ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை": உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்-

by Editor / 30-09-2021 05:43:08pm

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்
 சிறையில் கொலை செய்யப்பட்டாரா? 

2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரத்தில், க நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரியை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக அவரை கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றதாக காவல்துறையினர் கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டது. உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறினர். ஆனால், இதை ராம்குமாரின் பெற்றோர்கள் மறுத்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக காவல்துறையினர், ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து வேறெந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் கைது செய்யப்பட்டதிலும் சர்ச்சை கிளம்பியது.இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்து வரும் மனித உரிமை ஆணையம், ராம்குமாரின் மரணம் குறித்தும் விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு ஆஜரான, மருத்துவர்கள், ராம்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமாரின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

 

Tags :

Share via