மோடியை சந்தித்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

by Editor / 05-10-2021 09:57:40am
மோடியை சந்தித்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ஜூலை மாதம் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.மத்திய அமைச்சராக பொறுப்பேற்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், பதவியேற்ற 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும்.

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.அப்போது `திருக்குறள் - ஊக்கத்தின் முத்துகள்' என்ற ஆங்கில நூலை பிரதமரிடம் வழங்கினார்.

 

Tags :

Share via