மணல் மாட்டு வண்டிகளை இயக்க விரைவில் அனுமதி- அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 08-10-2021 10:39:20am
மணல் மாட்டு வண்டிகளை இயக்க விரைவில் அனுமதி- அமைச்சர் செந்தில் பாலாஜி

மணல் மாட்டு வண்டிகளை இயக்குவதற்கான அனுமதியை முதல்வரிடம் பேசி பெற்றுத்தருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. கரூர் மாவட்ட கவுன்சிலர் 8வது வார்டு, க.பரமத்தி ஒன்றியம் 8 வது வார்டு உறுப்பினர் பதவி என 15 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்ட கவுன்சிலர் 8வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணையனை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளியணை கடைவீதியில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மணல் மாட்டு வண்டிகள் இயக்குவதற்கான அனுமதி குறித்து காட்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் பேசினான்.

சென்னை வந்தவுடன் முதல்வரிடம் பேசி மணல் மாட்டு வண்டிகள் இயக்குவதற்கான அனுமதியை பெற்றுத்தருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்குறுதி அளித்துள்ளார். மாட்டு வண்டிகள் இயக்குவதற்கு அனுமதி வழங்கவில்லை என யாரேனும் கூறினால், 3 வருடமாக இயக்குவதற்கு ஏன் அனுமதி தரவில்லை என அவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும். 4 மாத காலத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரூர் மாவட்டத்திற்கு 2000 கோடி அளவுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 வருடமாக அதிமுக ஆட்சியில் என்ன திட்டங்களை செய்தார்கள் என்று நீங்கள் கேட்க வேண்டும்" என்று பொதுமக்களைப் பார்த்து பேசினார்.

 

Tags :

Share via