வணிகரிடம் ரூ.10 லட்சம் மிரட்டி பறித்த வழக்கு : கைதான எஸ்.ஐ.க்கு ஜாமின்

by Editor / 08-10-2021 04:29:17pm
வணிகரிடம் ரூ.10 லட்சம் மிரட்டி பறித்த வழக்கு : கைதான எஸ்.ஐ.க்கு ஜாமின்

 

வணிகரிடம் ரூ.10 இலட்சம் மிரட்டி பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வணிகரை மிரட்டி ரூ.10 இலட்சம் பணம் பறித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வசந்தி உட்பட 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. காவல் ஆய்வாளர் வசந்தி தற்போது சிறையில் இருக்கிறார்.


அவர் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் வசந்திக்கு நிபந்தனை ஜாமின் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வசந்தியின் கணவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


காவல் ஆய்வாளர் வசந்தி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று 30 நாட்கள் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும். ஜாமின் பெற்றதும் சாட்சியங்களை கலைக்க முயற்சி ஏதேனும் எடுத்தால், ஜாமின் இரத்து செய்ய கூறி மனுதாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


மேலும், நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு ஜாமின் வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை மீறுவது போன்று நடவடிக்கை ஏதும் எடுக்கும் பட்சத்தில், ஜாமினை ரத்து செய்யக்கூறி மனுதாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via