எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு ராணுவ கமாண்டர் மனோஜ் பாண்டே தகவல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு ராணுவ கமாண்டர் மனோஜ் பாண்டே தகவல்

by Editor / 19-10-2021 03:11:12pm
 எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில்  சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு ராணுவ கமாண்டர் மனோஜ் பாண்டே தகவல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில்  சீன ராணுவ நடமாட்டம் அதிகரிப்பு ராணுவ கமாண்டர் மனோஜ் பாண்டே தகவல்

‘‘எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளது’’ என்று கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார்.
மேலும் இந்நிலையில் அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கூறியதாவது:


எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் வருடந்தோறும் ஈடுபடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்கள் அப்பகுதியில் தங்கிஉள்ளனர். இதனால், எல்லைக்கட்டுப்பாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில், இரு நாடுகளும் உள்கட்டமைப்புகளை அதிகரித்து உள்ளன. இதனால், சில நேரங்களில் பிரச்னைகள் ஏற்படுகிறது.
சீன ராணுவத்தின் பிராந்திய திட்டங்களின்படி, எல்லை ஒட்டிய பகுதிகளில் கிராமங்கள் உருவாகி உள்ளன. அவை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது பொருத்து கவலைக்குரியதாக மாறுகிறது.


நமது திட்டங்களில், இதனை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க ஒவ்வொரு செக்டாரிலும் போதிய அளவு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பிட்ட பகுதிகளில், பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம்.


ராணுவ வாகனங்கள், பதிலடி கொடுப்பதற்கு ஆளில்லா விமானம், வெடிமருந்து, குண்டுகள் எல்லாம் தயாராய் கைவசம் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்படக்கூடிய ரேடியோ செட், சிறப்பான ராடார்கள், இரவில் ஒளியாகப் பார்க்கக்கூடிய தொலைநோக்கி சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் ஆகியவற்றுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via