ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: கவர்னரிடம் எடப்பாடி புகார்

by Editor / 20-10-2021 03:40:01pm
ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: கவர்னரிடம் எடப்பாடி புகார்


கவர்னர் ஆர்‌.என்‌. ரவியிடம் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்‌ முதலமைச்சரும், எதிர்க்கட்சித்‌ தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்‌ தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்‌ கையொப்பமிட்டுள்ள கடிதம்‌, புகார்‌ விபரங்கள்‌ மற்றும்‌ அதற்கான ஆதாரங்களை கவர்னரிடம் அவர் கொடுத்தார்.


துணை ஒருங்கிணைப்பாளர்களான, முன்னாள்‌ அமைச்சர்கள்‌ கே.பி. முனுசாமி, எம்.எல்.ஏ. ஆர்‌. வைத்திலிங்கம்‌, எம்.எல்.ஏ, கழக அமைப்புச்‌ செயலாளர்களும்‌, முன்னாள்‌ அமைச்சர்களுமான பி. தங்கமணி, எம்.எல்.ஏ., எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ., கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான டி. ஜெயக்குமார்‌, முன்னாள்‌ அமைச்சர்‌ சி.வி. சண்முகம்‌ ஆகியோரும் எடப்பாடியுடன் சென்று கவர்னரை சந்தித்தனர்.


பல்வேறு முறைகேடுகள்‌ சம்பந்தமான விபரங்களையும்‌ உரிய ஆதாரங்களுடன்‌ பட்டியலிட்டு, சம்பந்தப்பட்டவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்‌, விரைவில்‌ நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித்‌ தேர்தல்களில்‌ முறைகேடுகள்‌ நடைபெறா வண்ணம்‌ ஐனநாயக முறையில்‌ நேர்மையாக தேர்தல்களை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசியதாவது:


‘‘தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் தெளிவாக விளக்கம் அளித்து அது தொடர்பாக மனு அளித்துள்ளோம். இந்த தேர்தலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தி.மு.க. தில்லுமுல்லு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டு, ஜனநாயகப் படுகொலை செய்து வெற்றி பெற்ற அண்ணா தி.மு.க. வேட்பாளர்களைத் தோல்வி அடைந்தவர்களாக அறிவித்துள்ளது.


இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை உடனுக்குடன் அறிவித்தார்கள். ஆனால் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை தாமதமாகவே அறிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 4 ஆயிரத்து 500 வாக்குகளுக்கு மேல் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அதை அறிவிக்க காலதாமதம் செய்தனர். இதுகுறித்து தெரிவிப்பதற்காக அண்ணா தி.மு.க. வேட்பாளர், நிர்வாகிகள் ஆகியோர் கலெக்டரை அணுகினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பின்னர் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகுதான் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.


மேலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை தோல்வி அடைந்தவர்களாக அறிவித்தனர். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் கைப்பாவையாகச் செயல்பட்டு அரசு சொல்லியதை அப்படியே நிறைவேற்றியுள்ளது. இந்த 9 மாவட்ட கலெக்டர்களும் தேர்தல் பணிகளை முறையாகக் கவனிக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ள் நடைபெறும் என்று கருதிதான் தேர்தல் நியாயமாக ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்று அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தை நாடினோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களது கோரிக்கையை நிராகரித்தது.
அதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அப்போது நீதியரசர் ‘இந்த தேர்தலை முறையாக நடத்த வேண்டும். இப்போது நடைபெறும் தேர்தல் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமான தேர்தலாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. தி.மு.க. அரசும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் ஆலங்காய் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து அந்த தொகுதி எம்.எல்.ஏ. வாக்குப் பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை தெளிவாக விளக்கி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.


கடந்த 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த அண்ணா தி.மு.க. தயாராக இருந்தது. ஆனால் தி.மு.க. நீதிமன்றத்தை அணுகி வார்டு வரையறையில் குழப்பம் இருப்பதாகக் கூறி தேர்தலை நடத்த தடை வாங்கியது. இதனால் தேர்தல் நடைபெறாமல் போனது.


மேலும் தூத்துக்குடியில் கார் நிறுத்தும் பிரச்சனையில் அமைச்சரின் உதவியாளர் பொதுமக்கள் முன்னிலையில் போக்குவரத்துக் காவலரைக் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து அந்தக் காவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அனால் அவரை மிரட்டி புகாரை வாபஸ் வாங்க வைத்தனர். இதுகுறித்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அண்ணா தி.மு.க. இந்த ஆண்டு பென்விழா கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த அரசு முன்னாள் அமைச்சரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நடத்தி வருகிறது. எங்களிடம் மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

Tags :

Share via