போக்சோ வழக்குகளை முறைப்படி விசாரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவு  

by Admin / 23-10-2021 02:36:18pm
போக்சோ வழக்குகளை முறைப்படி விசாரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவு  

போக்சோ வழக்குகளை விசாரணை அதிகாரி எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பல்வேறு உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடன், முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 
விசாரணை அதிகாரிகள் 164 கிரிமினல் சட்டத்தின்படி தேவைப்பட்டால் மட்டுமே, பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு வீடியோ பதிவு செய்ய நேரிட்டாலும், காவல்துறை சார்ந்த புகைப்படக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாத விசாரணை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo