இளைஞர்களின் கவலை…..காசு பார்க்கும் மனிதர்கள்.

by Editor / 01-11-2021 10:37:33pm
 இளைஞர்களின் கவலை…..காசு பார்க்கும் மனிதர்கள்.

 

இளைஞர்களின் கவலை…..காசு பார்க்கும் மனிதர்கள்.

 

         பதினாறு பதினேழு வயதிலே கவலைகளால் ஆட்கொள்ளப்பட்டு…. பதினெட்டாம் வயதில் பெரும் மன உலச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள் அப்படியென்ன கவலை என்கிறீகளா…? உங்களுக்குப் பெரியதாக இருக்காது….ஆனால், அவர்கள், அவர்களுக்குஅது கௌரவம்.. நம்பிக்கை..அழகுஎன எல்லாகி நிற்கிறதுதலைமுடி பிரச்சனை

        +2 படிக்கையில் மெல்ல முடி உதிருவது தெரியவருகிறது. தலைகீழவும் பொழுது சீப்பிலும் குளிக்கும்போது குளியலறையிலும் தலை துவட்டும் பொழுது துண்டிலும் வலிமை இழந்த முடிகள் உதிர்ந்து கண்ணுக்குத் தெரியும் பொழுது அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி ஆரம்பமாகிறது….நெற்றி ஏறிக்கொண்டிருக்கிறது…. இடை இடையே முடியின் நெருக்கம் குறைந்து இடைவெளி அதிகரிப்பது என்று மன உறுத்தலை முடி உதிர்வது ஒரு பெருந் தாக்கத்தை இளைஞர்களிடம் உருவாகிறது

       பெற்றோர்களிடம் சொல்லலாம் என்று யோசிக்கையில், சக வயதினரின் கிண்டல் ஆரம்பித்துவிடுகிறதுகிண்டல் ஆரம்பித்து விடுகிறதுஇளம் பெண்களைப் பார்க்கையில் அச்சம் தோன்றுகிறது. நம்மைப் பார்ப்பார்களா…? முடி இல்லையெனில், வழுக்கை வந்துவிட்டால்….? பிறகு…. பயம் அவர்களை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுகிறது….

       பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி ஒரு வழியாக மருத்துவரை அணுகலாம் என்று ஒருவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறலாம் எனக்கிளம்பி போய் பார்த்தால், அவர் ஒரு பெரிய பட்டியலை நீட்டுவார். கொஞ்சநாள் இதைச் செய்து முடியை வளர்க்கலாம் என்பார்கள். பணம் கறக்கப்படும்மாத்திரை, ஆயில்மெண்ட் என்று இரட்டிப்பு செலவு…. ஆறு மாதம் ஒரு வருடம் அலைச்சல் செலவு…. கடைசியில் கைவிரிப்பு…. அதற்குள் அந்த இளைஞரின் முடி கூடுதலாக உதிர்ந்திருக்கும்

       நம்பிக்கையின் அடிப்படையில் வேறு இடம்இன்னொரு இடம்எங்கும் பொய்.. காசு பிடுங்கும் உத்தி…. பளபளக்கும் வார்த்தைகள்….

       முடிஉதிர்வுபலகீனமா..? இல்லைஆனால், வளர்ந்து வரும் இளைஞனின் பலம்கௌரவம்நம்பிக்கை.. எதையும் எதிர்த்து நின்று சவால்விடும் துணிச்சலுக்கு அது ஒரு உந்து சக்தி

       ஆயிரம் ஜோடிகள் பார்த்து தம்மைக் கடந்தாலும் ஒரு ஜோடிகண்களின் அசைவிற் காத்திருக்கும் கனவுகள் பூத்துக் கிடக்கும் வாலிபத்தின் அங்கீகாரம் முடிஎன்பதில் எள்ளவும் சந்தேகமில்லை…. வயது முதிர்ந்தவர்களுக்கு முடிஉதிர்தலின் வலி தெரியாதுவாலிப பருவத்தின் உதிர்வு உயிர்வலி. கனவு கோட்டையை நொறுக்கும் டைம்பாம்….

         பெற்றோர்களை அப்படி இப்படி என்று தயார் படுத்தி பணத்தைச் செலவு செய்தாலும் தொடர் ஏமாற்றம் எல்லாம் லட்சக்கணக்கில்கடைசியில் ஹேர் பிளாண்டேசன் என்கிற நிலைக்குத் தள்ளப்படுவர்…. அந்த நடிகருக்கு நான் தான் பண்ணினேன்இந்த நடிகருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நான் தான் செய்வேன் என்று சுயவிளம்பரம்.. இதில் யூடிப்பில் எக்கச்சக்க முடி நடுதல் தொடர்பான வீடியோக்கள்.. இதைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொண்டு.. பேசி.. அவர்கள் இடம் சென்று வந்தால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்….

         இரண்டு வருட தனியார் பொறியியல் கல்லூரிக்கான கட்டணம்ஒரே தவணையில் கட்ட வேண்டும்….

         பெற்றோருக்குத் தலை சுற்றுகிறது…. வாலிபர்களுக்கு வயது செல்கிறதே….. முடி உதிர்கிறதேஇதிலாவது நிவாரணம் கிடைக்குமா? என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்..

        எங்கெங்கே பலகீனமோ…. அங்கங்கே அதை பலமாக்கி பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம்

        முடி உதிர்வது

        அதிக சூட்டினாலா..?

        இல்லை பரம்பரையா..?

        சரி பண்ணிவிடுவோம் என்று சொல்லி காசு பிடுங்கும்….

        சரியாக வரவில்லையெனில் மேலே சொன்ன சூடு, ஜெனிட்டிக் தப்பிக்கும் வார்த்தைகள்

        முடி வெட்டுகிற தொழிலாளிக்கு நூறு ரூபாய் கொடுக்க கணக்குப் பார்ப்பவர்கள்….முடி வளர்த்து விடுவேன் என்கிறவர்களுக்கு ஆயிரம்லட்சம் என்று கொட்டுகிறார்கள்

        மயிரு என்று இழிவாகச் சொன்னதுஇன்று லட்சங்களைப் பெற்றுத்தரும் தொழிலாக உயர்ந்து நிற்கிறது

       முடி உதிரும் இளைஞர்களும்அதற்கு ஆதரவு நல்கும்.. பெற்றோர்கள் இருக்கும் வரை….

       முடி..இழிந்த பொருளன்றுசிலரை கார்பரேட்களாகபலரை கோடிஸ்வரர்களாக உயர்த்திக் கொண்டிருக்கிறது. இளைஞன் மட்டும் நம்பிக்கையில் 

Tags :

Share via