வீணாகும் நெல் மூட்டைகள்...

by Editor / 17-11-2021 01:39:29pm
வீணாகும் நெல் மூட்டைகள்...

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்  அடுத்த சிலாவட்டம் பகுதியில் 50 தற்காலிக  அரசு  தற்காலிக நெல்  கொள்முதல் நிலையங்கள் 50க்கும் மேற்பட்ட  நேரடிக் கொள்முதல் நிலையங்களில் இருந்து   மொத்தமாக நெல் சேகரித்து வைக்கும் திறந்தவெளி  கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கே 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் உள்ளன. மேலும் தொடர்ந்து வரும் நெல் வரத்தால் தரைதளத்தில் மழைநீர் வெள்ளம் பாதிக்காதவாறு கட்டைகள் கட்டி மரப்பலகைகள் போட்ட பின்னர் தான் அதன் மேல் நெல் மூட்டைகளை அடுக்க முடியும்.

 இந்த அடிப்படை பணிகளை செய்வதற்கு கம்புகள், மரப்பலகைகள் மற்றும் நெல் மூட்டைகளை மூடி வைப்பதற்கான மழை நீர் புகாத பிளாஸ்டிக் பைகள் இருப்பு இல்லாத காரணத்தினால் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து வந்த நெல் மூட்டைகள் லாரியில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
 
 நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி மூடப்பட்டதால் மழை நீரில் நெல் மூட்டைகள் நனைந்து விட்டது. ஆனால் பத்தாயிரத்துக்கும் மேல் உள்ள நெல் மூட்டைகளில் நெற்பயிர்கள்  முளைத்துவிட்டன.

தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் இங்கு போதுமான அளவு நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான அம்சங்கள் இல்லாதிருப்பதால் நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Tags :

Share via