பெரம்பலூர் அருகே கல்லாற்று பகுதியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 20-11-2021 11:31:31pm
பெரம்பலூர் அருகே கல்லாற்று பகுதியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட்டத்திலுள்ள  பச்சை மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விசுவக்குடி நீர்தேகத்திற்கு அதிகமான நீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது.விசுவகுடி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் நீர்வரத்து முழுவதும் வெங்கலம் ஏரி வழியாக திறந்து விடப்பட்டு கல்லாற்றில் அதிகப்படியான நீர் செல்ல இருக்கிறது.

இதனால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது ஆகையால்  வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகாபாடி, மறவநத்தம், என். புதூர், வி.களத்தூர், ஆகிய கிராம மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று பார்வையிடவே, விளையாடவோ அல்லது கடந்து செல்லவோ முயற்சிக்க வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை  அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே கல்லாற்று பகுதியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
 

Tags :

Share via