சில வரிகளில் சின்ன ..சின்ன செய்திகள்

by Editor / 22-11-2021 04:28:37pm
சில வரிகளில் சின்ன ..சின்ன செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்த நிலையில் மிதவை இயந்திரம் கொண்டு முழுவதுமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்போது ஆற்றில் 1.50 லட்சம் கனஅடி நீர் சென்றதால் மிதவை இயந்திரம் அடித்துச் செல்லப்பட்டன.

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் - கமல்ஹாசன்.

வம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28 நாட்கள் 2GP மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆக உயர்த்தப்படுகிறது.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழப்பு.
கரூர் சுக்காலியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழந்துள்ளார். வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் மோதிவிட்டு சென்றதில் ஆய்வாளர் கனகராஜ் இறந்துள்ளார்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைவு.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 40,000 கனஅடி காவிரி நீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via