கடன் தொல்லை கல்லூரி பேராசிரியர் மனைவி, மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை

by Editor / 06-12-2021 04:42:16pm
கடன் தொல்லை  கல்லூரி பேராசிரியர் மனைவி, மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்னமுதலி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 66). சோளிங்கரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா (57). இவர்களுக்கு விஷ்ணு (29), பரத் (28) என்ற 2 மகன்கள். இதில் மூத்த மகன் விஷ்ணு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இளைய மகன் பரத் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் வீட்டில் இருந்தப்படியே பணியாற்றி வருகிறார்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ராமலிங்கத்திற்கு அதிகப்படியான கடன்தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 
பெங்களூருவில் இருந்து மூத்த மகன் விஷ்ணு ராமலிங்கத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீட்டிலுள்ள யாரும் தொலைப்பேசி அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த விஷ்ணு தன்னுடைய சித்தப்பா சிவகுமாருக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற அவரது தம்பி சிவகுமார் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஒரு மின்விசிறியில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோரும், மற்றொரு மின்விசிறியில் பரத்தும் புடவையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு 
 கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்ற ராமலிங்கத்தின் உறவினர்கள் மூவரின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவேரிபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மூவரும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 
 

 

Tags :

Share via