அமேசான் பண்டிகை கால விற்பனை  அக்டோர் 4ந் தேதி தொடக்கம்

by Editor / 27-09-2021 04:11:21pm
அமேசான் பண்டிகை கால விற்பனை  அக்டோர் 4ந் தேதி தொடக்கம்


நாடு முழுவதும் 75 ஆயிரம் விற்பனையாளர்கள் பங்கேற்கும் அமேசான் பண்டிகை கால மாபெரும் சிறப்பு தள்ளுபடி விற்பனை ‘கிரேட் இண்டியன் பெஸ்டிவல்- 2021’ அக்-டோபர் 4ந் தேதி தொடங்கி மாதம் முழுவதும் நடைபெறும் என அமேசான் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மனிஷ் திவாரி கூறியதாவது:
கொரோனா பாதிப்பால் சோர்ந்து போயுள்ள கடைக்காரர்கள் மற்றும் சிறிய, நடுத்தர விற்பனையாளர்கள் மீண்டும் புத்துணர்வு பெற ஏதுவாக இந்த சிறப்பு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்துக்கு தயாராகி வரும் நிலையில் விரைவான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். அமேசான் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 8.5 லட்சம் விற்பனையாளர்கள் உள்ளனர்.


‘கிரேட் இண்டியன் பெஸ்டிவலில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, சோனி, ஆப்பிள், போட், லெனோவா, எச்பி, அசுஸ், போசில், லெவிஸ், பிபா, ஆலன் சோல்லி, அடிடாஸ், அமெரிக்கன் டூரிஸ்டர், பிரெஸ்டீஜ், யுரேகா போர்ப்ஸ், போஷ், பிஜியன், பஜாஜ், பிக் மசில்ஸ், லாக்மே, மேபெலின், பாரஸ்ட் எசென்ஷியல்ஸ், தி பாடி ஷாப், வாவ், நிவியா, டாபர், பி & ஜி, டாடா டீ, ஹக்கீஸ், பெடிகிரீ, சோனி பிஎஸ் 5, கை்ரோ சாப்ட் எக்ஸ்பாக்ஸ், ஹாஸ்ப்ரோ, பன்ஸ்கூல், பிலிப்ஸ், வேகா மற்றும் பல முன்னணி பிராண்டுகளின் 1000க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் இடம் பெறுகின்றன.

 

Tags :

Share via