5 அடி அளவுக்கு தண்ணீர் கிராமத்தை சூழ்ந்ததால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.

by Admin / 19-12-2023 09:26:23am
 5 அடி அளவுக்கு தண்ணீர் கிராமத்தை சூழ்ந்ததால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.

கயத்தாறு வட்டம் ஆத்திகுளம் கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கிய மழைப்பொழிவு தற்போது வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கயத்தார் வட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திகுளம் கிராமத்தை ஒட்டி செல்லும் ஏண்டா குளம் தொடர் மலைக்கு நிரம்பி மறுகால் பாய்ந்தது. காலையில் இந்த குலத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் ஆத்திகுளம் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்தது. சுமார் 5 அடி அளவுக்கு தண்ணீர் கிராமத்தை சூழ்ந்ததால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அங்குள்ள உயரமான பகுதிகளில் இரவு முழுவதும் நின்று கொண்டிருந்தனர். நேற்று காலை வெள்ளம் சிறிது குறைந்து 3 அடி அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. தகவல் அறிந்த வட்டாட்சியர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவி செல்வி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை மற்றும் அதிகாரிகள் ஆத்திகுளம் கிராமத்திற்கு வந்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து வெள்ளம் வடியும் வரை உணவு வழங்கப்படும். மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினர். தொடர்ந்து அப்பகுதியை வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

 5 அடி அளவுக்கு தண்ணீர் கிராமத்தை சூழ்ந்ததால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
 

Tags :

Share via