பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 காவலர்கள் படுகாயம்

by Editor / 13-12-2021 11:26:02pm
 பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 காவலர்கள் படுகாயம்

புதுக்கோட்டையில் இருந்து இன்று மதுரை விமான நிலையத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை  அழைத்து வருவதற்கு புதுக்கோட்டையிலிருந்து சென்ற காவல்துறை பாதுகாப்பு வாகனம் திருமயம் அருகே கீழசேவல்பட்டியில் சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காவல்துறையின் பாதுகாப்பு வாகனம் சாலை அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த  காவலர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவலர்களை மீட்டு 108 வாகனத்தின் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 காவலர்களுக்கும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
 

 

Tags :

Share via