மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு இவ்வளவு கண்டிஷனா.?!

by Editor / 17-12-2021 02:22:39pm
மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு இவ்வளவு கண்டிஷனா.?!

 

 1854 ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நவீன யு.எஸ். போட்டியுடன் தொடங்கி எண்ணற்ற வருடங்களாக அழகுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மிஸ் யுனிவர்ஸ் என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் அமைப்பால் நடத்தப்படும் வருடாந்திர சர்வதேச அழகுப் போட்டியாகும். 

190க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்ட... mஉலகிலேயே அதிகம் பார்க்கப்படும் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன், மிஸ் யுனிவர்ஸும் மிகப்பெரிய நான்கு சர்வதேச அழகுப் போட்டிகளில் ஒன்றாகும். 

உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மிஸ் யுனிவர்ஸ், பெண்ணிய இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.அத்துடன் இப்போட்டிகள் பெண்கள் நம்பிக்கையுடனும், அழகாகவும், வலிமையுடனும் இருக்க உதவுவதாகக் கூறப்படுகிறது,

ஒவ்வொரு ஆண்டும் 75 முதல் 85 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிரதிநிதிகள் திருமணமாகியோ அல்லது கர்ப்பமாகவோ இருக்கக்கூடாது. 

அவர்கள் திருமணமாகாமல், திருமணத்தை ரத்து செய்யாமல், குழந்தை பிறக்காமல் இருந்தால் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அத்துடன் ஒரு போட்டியாளர் ஒரு முறை மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும் இதனால் போட்டியாளர்கள் அதிக அழுத்தத்திற்கும் உள்ளாக கூடும். 

இந்த போட்டியின் நீதிபதிகள் ஒவ்வொரு பிரதிநிதிகளுடனும் அவரது வெற்றிகள், இலக்குகள் மற்றும் லட்சியங்களைப் பற்றி அறிய நேரத்தைச் செலவிடுவார்கள். பின்பு ஒவ்வொரு பிரதிநிதியும் ஒரு ஸ்பான்சரால் வழங்கப்படும் பல்வேறு வகையான நீச்சலுடை பாணிகளில் ஒன்றை அணிந்து வரவேண்டும். பிறகு மாலையில் ஒவ்வொரு போட்டியாளரும் அவர் தனக்காக தேர்ந்தெடுத்த கவுனை அணிந்து அணிவகுத்து வருவர்.
 
இப்படி நடைபெறும் நேர்காணல்கள், நீச்சலுடை போட்டி, கவுன் போட்டி என மூன்று சுற்றின் மதிப்பெண்களின் அடிப்படையை வைத்தே வெற்றியாளர் தேர்வுசெய்ய படுவர்.

உலகின் மிகவும் மதிப்புமிக்க போட்டி ஒன்றில் போட்டியாளராக இருப்பது எந்த வகையிலும் மலிவானது அல்ல! நீச்சலுடைகள், தடகள உடைகள், கவுன்கள் மற்றும் உங்கள் சொந்த நாட்டோடு தொடர்புடைய உடைகள் என தேவைப்படும் தொடர்ச்சியான ஆடைகளுக்கு மட்டும் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும். 

பெரும்பாலும் ஒரு முறை மட்டுமே அணியப்படும் ஒரு ஆடைக்கு குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை தேவைப்படும் என தெரிகிறது..... கூடுதலாக, முடி, ஒப்பனை, அணிகலன்கள், பயிற்சியாளர்கள், பயிற்றுனர்கள் மற்றும் பலவற்றின் கூடுதல் செலவுகள், இப்போட்டியை விலையுயர்ந்த ஒரு போட்டியாக மாற்றுகிறது. 

இந்த போட்டியில் வெற்றியாளர் முடிசூட்டிய பிறகு அனைத்தும் முடிந்துவிடும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்..ஆனால் மிஸ் யுனிவர்ஸ்பட்டத்தை வெல்வது என்பது நடைமுறையில் ஒரு வருடம் முழுவதும் தங்கள் வாழ்க்கையை விற்பது என்று ஆங்கில நாளிதழான தி இன்டிபென்டன்ட் கூறுகிறது.

 அடுத்த வருடம் புதிதாக ஒரு பெண் வெற்றியாளராக முடிசூட்டப்படும் வரை தற்போதுள்ள பிரபஞ்ச அழகி தான் மிஸ் யுனிவர்ஸ் பிராண்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நூற்றுக்கணக்கான நேர்காணல்கள், பொது தோற்றங்கள், நிகழ்ச்சிகளை நடத்துதல், பயணம் செய்தல், மனிதாபிமானப் பணிகளைச் செய்தல் என்று இன்னும் அந்த நிறுவனம் சொல்லும் அனைத்து வேலைகளுக்கும் மறுப்பின்றி புன்னகையுடன் ஒத்துழைக்க வேண்டும் இடையில் வெற்றியாளர் திருமணம் செய்வதோ அல்லது எந்த வகையான காதல் உறவிலோ இருக்க கூடாது.

இவ்வளவு சிக்கல்களும் சிரமங்களும் நிறைத்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறுவது என்பது எளிதான காரியம் அல்ல இதுவரை இந்தியாவிலிருந்து 3 பெண்கள் மட்டுமே பிரபஞ்ச அழகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்னனர். 1994ல் ஷுஷ்மிதா சென்னிற்கு அடுத்து 2000தில் லாரா தத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன் பிறகு 21 ஆண்டுகளுக்கு கழித்து தற்போது இந்திய மாடல் மற்றும் மிஸ் திவா 2021 கிரீடம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். 


70வது மிஸ் யுனிவர்ஸ் வெற்றியாளரான இவருக்கு ஸ்பான்சர் சலுகைகள் உட்பட  சுமார் 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த இந்த பரிசு பணத்தை விட பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் ஒரு வருடத்தில் அதன் வெற்றியாளரை வைத்து சம்பாதித்து விடும். இந்த மிஸ் யூனிவெர்ஸ் போட்டி மட்டும் அல்ல உலகில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் வியாபார நோக்குடன் வணிகரீதியான லாபத்தை ஈட்டுவதற்காகவே நடத்த படுகின்றன.

மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு இவ்வளவு கண்டிஷனா.?!
 

Tags :

Share via