சென்னையில்  அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்*

by Admin / 23-08-2021 03:54:27pm
சென்னையில்  அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்*

1).   ஆகாயம்
       ~~~
சென்னையில் அமைந்திருக்கும் ஆகாயஸ்தலமாக,
சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும்.
இதன் மூலவர் திருமூலநாதசுவாமி ஆவார்
NO:112,அவதான பாப்பையா தெரு,
சூளை ,
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில்
சென்னை-112
என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.
7C, 7B, 7D, 164, 59, 159 என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணி முதல் 11.30 வரையிலும்,மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்.
தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு 8.30க்கு நடைபெற்றுவருகிறது.
           
2).   மண்
       ~~
சென்னையின்
மண் ஸ்தலமாக அருள்மிகு *ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.
இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மனுடன் அருள் புரிந்து வருகிறார்
தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.
சென்னையில்,
வன்னி மரத்தடியிலும்,
அரச மரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே.
காலை 6 முதல் 12 வரையிலும்,மாலை 4 முதல் 9 வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும்.
1, 21, 51, 57, 18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிது தொலைவில் அமைந்திருக்கிறது.
மண் ராசிகளான ரிஷபம், கன்னி, மகர, ராசிகள் மற்றும் ரிஷப லக்னம், கன்னி லக்னம், மகர லக்னத்தில், பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட, அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.
           
3).    நீர்
        ~
சென்னையின்
நீர்ஸ்தலமான
கங்காதரேசுவரர்
தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.
7A, 7F, 7H, 34, 16A, 22, 29D, 23C, 27K என்ற எண்ணுள்ள பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் பயணித்து கங்காதரேசுவரர் சிவன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
இந்த ஆலயம் புரசைவாக்கத்தில் அமைந்திருக்கிறது.
கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,
மீன லக்னம் அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில், இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.
               
4).   நெருப்பு
       ~~~
சென்னையின்
நெருப்பு ஸ்தலமாக *அருணாச்சலேசுவரர், அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.
நெருப்பு ஸ்தலமான *அண்ணாமலை சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது.
NO:24,பள்ளியப்பன்தெரு, சவுக்கார்பேட்டை, சென்னை-79.
28, 34, 37, 159 இந்த எண்ணுள்ள பேருந்துகளில் பயணித்து யானைக்கவுனி காவல் நிலையம் நிறுத்தத்தில் இறங்கி, வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாப்பிள்ளை தெரு வழியாக சிறிது தொலைவில் பயணித்தால் இந்த திருக்கோவிலை அடையலாம்.
ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது.
இங்கே பெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார்.
மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி, சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி, தனுசு லக்னம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.
தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்.
மற்ற ராசிக்காரர்களும் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.
              
5).    வாயு
       ~~~
சென்னையின்
வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர் ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில்,
NO:155, பவளக்காரத்தெரு,பாரிமுனை,சென்னையில் அமைந்திருக்கிறது.


காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இத்திருக்கோவில் திறந்திருக்கும்.
38H, 44, 44C, 56C, 116 என்ற எண்ணுள்ள பேருந்தில் ஒன்றில் பயணித்து மாணவர் மன்றம் அல்லது தம்புச்செட்டித்தெரு அல்லது பவளக்காரத் தெரு நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் கடைசியில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.

அல்லது ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத்தெரு நுழைந்தவுடன் இந்த திருக்கோவிலை அடையலாம்.
மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி, துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி, கும்ப லக்னம் அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டே இருக்கும் யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது
சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும், பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.

 

Tags :

Share via