நூதன முறையில் கஞ்சா கடத்தல் 20கிலோ சிக்கியது.

by Editor / 17-12-2021 10:32:25pm
நூதன முறையில் கஞ்சா கடத்தல் 20கிலோ சிக்கியது.

கேரளமாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.கடந்த 10தினங்களுக்கு முன்னர் தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் வழியாக தெலுங்கனாவிலிருந்து ஒரு காரில் 70கிலோ கஞ்சா கடத்தி செல்லப்பட்டதை அந்த மாநில போலீசார் இருமாநில எல்லையில் வைத்து கைபற்றி 2 நபர்களை கைது செய்தனர்.

இதே போன்று ரயில்களிலும் கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்ப்டுவது அதிகரித்து வருகிறது.தற்போது நூதனமாக கஞ்ச கடத்தும் குமபல்கள் பல்வேறு வழிகளை பிணைபற்றி வருகின்றனர்.
 
 இந்நிலையில் ஆந்திராவிலிருந்து தேனி மாவட்டத்துக்கு கூரியர் பார்சல் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை தேனி மாவட்டம் முழுவதும் கூரியர் நிறுவனங்களைக் கண்காணித்து வருகிறது.இந்த நிலையில் 
தேனி கம்பம் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கொரிய வந்துள்ளது. இதையடுத்து கொரியர் நிறுவனத்தின் ஊழியர் அதை டெலிவரி செய்ய சென்றபோது, கடையின் உரிமையாளர் அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் தன்னுடையது அல்ல என்று கொரியரை பெற மறுத்துள்ளார். 

இதையடுத்து அந்த பார்சலை ஊழியர் டெலிவரி செய்யாமல் கொரியர் அலுவலகத்ததிற்கு  மீண்டும் கொண்டுவந்துவிட்டார்.இந்நிலையில், அந்த முகரியை மாற்றி அனுப்பி விட்டதாக கூறி ஒருசிலர் பார்சலை பெற முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த கொரியர் நிறுவனம், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்து பார்சலை கைப்பற்றிய போலீசார், அதை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்த‌து. மேலும், இந்த சம்பத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via