சாலையில் சாகவசமாக கிடந்த 12அடி நீளமுள்ள இரட்சத மலைப்பாம்பு.

by Editor / 20-12-2021 12:31:37am
சாலையில் சாகவசமாக கிடந்த 12அடி நீளமுள்ள இரட்சத மலைப்பாம்பு.


தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக வனப்பாகுதியிலிருந்து ஏராளமான ஊர்வன வகையை சேர்ந்த மலைப்பாம்புகள் நீரில் அடித்துவரப்பட்டு ஊருக்குள் நுழைந்துள்ளது.இந்த நிலையில்  இலத்தூர்  சாலையில் இன்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார் அப்பொழுது சாலையின் குறுக்கே சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே தவழ்ந்து வந்துள்ளது. இதனை பார்த்து இரு சக்கர வாகன ஓட்டி அச்சத்துடன் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த  வனத்துறையினர் சாலையில் குறுக்கே உலாவந்து படுத்து கிடந்ததைக்கண்டு அதனை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.ஆனால் அந்த இராட்சத மலைப்பாம்பு வனத்துறை ஊழியரின் கையில் சுற்றியதால் அவர் அதனை உடனே கீழே போட்டுவிட்டார்.பின்னர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு சாலையின் குறுக்கே கிடந்த ராட்சதமலைப்பாம்பை மிகவும் கஷடப்பட்டு பிடித்தனர் மேலும் பிடிக்கப்பட்ட பாம்பை மிகவும் கவனத்துடன் சாக்குப்பையில் போட்டு அடைத்து பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விடுவதற்காக கொண்டு சென்றனர் மலை பாம்பை மிகவும் லாவகமாக நீண்ட போராட்டத்துக்கு இடையே பிடித்து வனத்துறை அலுவலரரை அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் பாராட்டினார்.

சாலையில் சாகவசமாக கிடந்த 12அடி நீளமுள்ள இரட்சத மலைப்பாம்பு.
 

Tags :

Share via