பக்தர்கள் கூட்டத்தால் திணறும் சபரிமலை.. 

by Editor / 13-12-2023 11:03:05pm
பக்தர்கள் கூட்டத்தால் திணறும் சபரிமலை.. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் தினசரியும் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்குப்பின்னர் நாளுக்கு நாள் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதால் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரைக்கும் 16 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பக்தர்களை கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசாரும் ஆர்வம் காட்டாததாலும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக அவதியடைந்து வருகின்றனர். கடந்த வருடம் வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கேரள காவல்துறை வசம் இருந்தது. இந்த வருடம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இது காவல்துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வருடம் வரை பல நாட்கள் தினசரி 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தபோதிலும் அதிகமாக எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நடை சாத்தப்பட்டிருக்கும் நேரங்களில் 18ம் படி ஏற போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது நடை சாத்தப்பட்டுள்ள சமயங்களில் 18ம் படி ஏற அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தினமும் 6 முதல் 18 மணிநேரம் வரை பக்தர்கள் குழந்தைகளோடு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த வசதியும் தேவசம்போர்டு சார்பில் செய்து கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மேலும் இன்று  நிலக்கல்-பம்பா வழித்தடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு குடிப்பதற்கு தண்ணியும் இல்லை உண்பதற்கு உணவும் இல்லை எனக் கூறி பக்தர்கள் கேரள மாநில அரசு அதிகாரிகளின் வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த குழந்தைகள் உள்பட பக்தர்கள் மயக்கமடைந்தனர். ஏற்கனவே 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அறிந்த கேரள உயர்நீதிமன்றம், பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்து தர வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியரும் கேரள டிஜிபிக்கும் உத்தரவிட்டது. மேலும் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது ஏற்பட்டு உள்ள பிரச்னைகளுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டும், காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து விசாரித்த தேவசம்போர்டு பெஞ்ச் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி உடனடியாக சபரிமலை சென்று நிலைமையை கண்காணிக்க உத்தரவிட்டது. மேலும் பக்தர்களுக்கு என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க சட்டம் ஒழுங்கு ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியை போல சபரிமலையில் வரிசை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சரங்குத்தி மற்றும் மரக்கூட்டம் பகுதிக்கிடையே 6 இடங்களில் இந்த வரிசை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வு எடுக்க தனித்தனி அறைகளும், சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. தரிசன நேரம் தெரிவதற்காக டிஜிட்டல் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சபரிமலை நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, எந்த முன்னேற்ப்பாடுகளும் பக்தர்களுக்கு ஏற்பாடும் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது .

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும். பயணிகள் தெய்வ தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மருத்துவ வசதி, குடிநீர், போக்குவரத்து வசதிகள் இல்லை. போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லை. யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு. 8 வயதுடைய சிறுமி ஒருவர் வரிசையில் நின்று இறந்தார் என்றும், ஆனால், அரசு யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே சபரிமலை வரும் பக்தர்களுக்கு நீலிமலை, அப்பாச்சிமேடு பகுதிகளில் உள்ள மருத்துவ சிகிச்சை மையங்களில் போதிய அளவில் இதய சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் அமைக்க வேண்டும். மலையேற்றப் பாதைகளில் போதிய அளவில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆங்காங்கே மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பாச்சிமேடு (தொலைபேசி எண் 04735-202050 04735-202050 ) நீலிமலை (தொலைபேசி எண் 04735-203384 04735-203384 )

சன்னிதானத்தில் அரசு மருத்துவமனை - 04735 - 202101 04735 - 202101. அரசு ஹோமியோ மருத்துவமனை - 04735 - 202843 04735 - 202843 அரசு ஆயுர்வேத மருத்துவமனை NSS மருத்துவமனை - 04735 - 202010 04735 - 202010 தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் தினசரியும் வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. 27ஆம் தேதி இரவுடன் கோவில் நடை அடைக்கப்பட்டு விடும். வரும் 30ஆம் தேதிதான் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதியுடன் இந்த ஆண்டுக்காக மண்டல பூஜை, மகர ஜோதி பூஜை முடிவடைய உள்ளதால் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தும் சில நிமிடங்கள் கூட ஐயப்பனை தரிசனம் செய்ய முடியவில்லையே என்பதுதான் பக்தர்களின் வேதனையாக உள்ளது.

நாட்டில் கொரோனோ பெரும் தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்பு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர். ஐயப்ப பக்தர்களின் வருகையை ஒட்டி கேரள மாநில அரசாங்கம் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பக்தர்களின் வசதிகளுக்கு ஏற்ப பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலிலும், சுவாமி தரிசனம் செய்வதற்கு சில மணி நேரங்களும் காத்திருந்தும் சாமி  தரிசனம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,தமிழகம், ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநில ஏராளமான அய்யப்பபக்தர்கள் பமபையில் இருமுடியை பிரித்து அங்குள்ள ஆலயங்களில் நெய்யபிஷகத்தை முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சபரிமலை வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிலை எந்த ஆண்டிலும் ஏற்பட்டதில்லை என்று பக்தர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

 

Tags : பக்தர்கள் கூட்டத்தால் திணறும் சபரிமலை.. 

Share via