83 கிராமங்கள் பாதிப்பு சிட்ரங் சூறாவளிக்கு

by Staff / 26-10-2022 10:56:49am
 83 கிராமங்கள் பாதிப்பு சிட்ரங் சூறாவளிக்கு

அசாம் உள்ளிட்ட குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களை சிட்ரங் சூறாவளி கடந்து சென்றது. அசாமில் சிட்ரங் சூறாவளி பாதிப்புக்கு 83 கிராமங்களை சேர்ந்த 1,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. இதனால், அசாமில் நகாவன் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கலியாபோர், பாமுனி, சக்முதியா தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சூறாவளியால் ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து 325.501 ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்தது.மேலும், உயிரிழப்பு, காயங்கள் உள்ளிட்டவை ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சிட்ரங் சூறாவளியை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பக்காளி பீச்சில் கடல் அலைகள் அதிக உயரத்துடன் வீசின. இதனால், சுற்றுலாவாசிகள், உள்ளூர் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via