இறந்தவரது உடலை மயானத்திற்கு செல்லவழியின்றி தவிக்கும் மக்கள்

by Editor / 25-12-2021 09:12:01pm
இறந்தவரது உடலை மயானத்திற்கு செல்லவழியின்றி தவிக்கும் மக்கள்

கமுதி அருகே 70 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல வழிப்பாதை வசதி இல்லாததால் வயல்வெளியில்  இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் கிராம மக்கள், பாதை வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தல்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் தங்களது கிராமத்தில் யாரேனும் உயிரிழந்துவிட்டால்  அவர்களின் உடல்களை  சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செல்வதற்கு பாதை வசதிகள் இல்லாமல் சுதந்திரம் பெற்ற காலம் முதல் தற்போது வரை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உயிரிழந்த ஒருவரின் உடலை இறுதி சடங்கு செய்வதற்காக  சுடுகாட்டிற்கு  கொண்டு செல்வதற்காக வயல்வெளியில் தண்ணீர், சேகதியுமாக  உள்ள வயல்வெளியில் மிகுந்த சிரமப்பட்டு உடலைக் கொண்டு சென்றனர்.

கோடைகாலங்களில் அறுவடைகள் முடிந்து தரிசாக கிடைக்கும் வயல் வெளிகள் வழியாக இறந்தவர் உடலை சுமந்து சென்றுவிடுவது எளியதாகவும்,தாங்கள் மயானத்திற்கு செல்வதற்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் இருப்பதாகவும் மழைக்காலம் தொடங்கிவிட்டால்  வயல்களில் விவசாய பணிகளை மேற்கொண்டால் இறந்தவர்களது உடலை கொண்டு செல்வதில்  மிகுந்த சிரமமாக உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இருக்கும் போது  இடமில்லாமல் இருந்தாலும் இறந்தபின்னர் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல பாதையின்றி பரிதாபத்திற்கு தள்ளபட்டுள்ளதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு இறந்தவர் உடலை மயானத்திற்கு  கொண்டு செல்வதற்கு பாதை வசதியை  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via