ஓசூரில் விமான நிலையம் தமிழக அரசு தீவிரம்,

by Editor / 29-12-2021 08:57:11pm
ஓசூரில் விமான நிலையம் தமிழக அரசு தீவிரம்,


தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னணி நகரமாக விளங்கிவருவது  ஒசூர் நகரம் மட்டும், இங்குதான் புகழ் பெற்ற இந்தியாவின் முன்னணி வாகனத்தொழிற்சாலைகள் நிறுவனங்களான டிவிஎஸ், அசோக் லைலெண்ட்,  உள்ளிட்ட பெரிய முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்களும் நிரம்பி காணப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுவதாலும், தொழில் வளர்ச்சிக்கு ஏதுவான நகரமாக இருப்பதாலும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக ஓசூர் விளங்கிவருகிறது.தமிழர்கள் நிறைந்தபகுதி மட்டுமின்றி பல மாநில  மக்களும் தொழிலாளர்களாக இங்கு பணியாற்றி வருகின்றனர்.தமிழக கர்நாடக எல்லை பகுதி நகரமாக இந்தபகுதி விளங்கி வருகிறது.மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஒசூரில் விமான நிலையம் அமைத்திட அறிவித்தது.

ஒசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும், தமிழ்நாடு அரசு அதனை அமைக்க முன்வர வேண்டும் என கிருஷ்ணகிரி எம்.பி.செல்லக்குமார் கோரிக்கை விடுத்த நிலையில் உள்நாட்டு விமான நிலைய முனையம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒப்பந்தம்  கோரி அறிவிப்பு  வெளியிட்டப்பட்டுள்ளது. விமானநிலைய பணிகளை கோரும் நிறுவனங்கள் டெண்டர் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31 வரை டிட்கோ மூலம் டெண்டர் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via