யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் குழு அமைப்பு.

by Editor / 30-12-2021 12:35:08pm
  யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் குழு அமைப்பு.

தேன்கனிக்கோட்டை அருகே வயலில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்த யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தனர் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஜவளகிரி சானமாவு காடுகளில்  முகாமிட்டுள்ளன யானைகள் இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து ராகி,   அவரை, பீன்ஸ், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட 40.க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி காப்புக்காட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டது.அதில் ஒற்றை யானை மட்டும் தின்னூர் முள் பிளாட்டிற்கு திரும்பிவிட்டது.இன்று ஜவளகிரியிலிருந்து யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட ஜவளகிரி வனச்சரக அலுவலர். சுகுமார் தலைமையில் குழு அமைப்பு. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

  யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் குழு அமைப்பு.
 

Tags :

Share via